Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.மழை காலங்களில் பொதுவாக நிறக் குறியீடு வைத்தும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை வைத்து மழையின் அளவை சொல்லுவது வழக்கம். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற நிறங்களில் மழைக்கான குறியீடு உள்ளது. சிவப்பு என்றால் அதி கனமழை பெய்யும். பல இடங்களில் மின்கம்பங்கள் சரியும், மரங்கள் சரியும் இது சிவப்பு நிற எச்சரிக்கை ஆகும். அதைவிட கொஞ்சம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு மணி நேர மழை…. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை…. உடனே பாருங்க என கமல் ட்விட் …!!

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது […]

Categories
சற்றுமுன் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற  9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]

Categories
உலக செய்திகள்

வறுமையின் கோரப்பிடி…. கடவுள் அனுப்பிய பரிசு…. நன்றி கூறும் மக்கள்…!!

வானிலிருந்து கல்மழை பொழிந்தது வறுமையில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது பிரேசிலில் சான்டா பிலோமினா நகரத்தில் வாழும் 90 சதவீத மக்கள் வறுமையில் வாடும் விவசாயிகள் ஆவர். தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என கலங்கி நின்ற மக்களுக்கு வானிலிருந்து பண மழை பொழிந்து உள்ளது. எடிமார் என்ற மாணவன் திடீரென அந்நகரில் வானம் அதிக அளவு புகைமூட்டமாக காணப் படுவதைப் பார்த்து ஆச்சரியமாக நின்றுள்ளான். அச்சமயம் அவரது நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“தென்மேற்கு பருவக்காற்று“ 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழைக்கும் சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதா தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வங்க […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்…!!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில்  கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல்முதல் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. ”3மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்”…. வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி,தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை ( ரெட் அலர்ட்) மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எலும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மாநில மையம் தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ..!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் திருமழிசை காய்கறி சந்தை …!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசை செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறி இருக்கிறது. சாதாரண மழைக்கே திருமழிசை காய்கறி சந்தைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மார்க்கெட் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழகி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காய்களை பாதுகாப்பாக வைக்க […]

Categories
மாவட்ட செய்திகள்

மழை நீரால் சேதமடைந்த நெற்கதிர்கள்…!!!!

மயிலாடுதுறை அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்மடைத்தன இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்தி மே மாதம் முன்னதாகவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை …..!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதே போல் தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற சுற்று வட்டார […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் : வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம், மணல்மேடு, குத்தாலம், நங்கை நல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் பயிர்களில் கதிர்கள் விரைவாக வெளி வரும். என விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், நாகை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் […]

Categories
மாநில செய்திகள்

தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் 3 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தேனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 4 மாவட்டத்திற்கு கனமழை… சேலம், நாமக்கல், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு “5 மாவட்டத்தில் வெளியில் கொளுத்தும்”… “3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு”..!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களுக்கு “தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு “… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைகாலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 40, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச […]

Categories
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டத்திற்கு மழை…. மணிக்கு 45km TO 55km காற்று வீசும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 15ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. கூடலூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை..!!

தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம், தென்காசி, செய்யாறு, மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல, அவிநாசி, சூளை,சேலையூர்,காசிக்கவுண்டன்புதூர், காமராஜ்நகர், உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்தது. மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், கோரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், குச்சிபாளையம், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெரிது வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் தொடர் மழை : நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு!

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை : மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி – தேவாலாவில் 9 செ. மீ., மழையும், கன்னியாகுமரி சித்தாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே நிசர்கா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, வேலூர், தென்காசி உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்த்திரம், ரெட்டியார்பட்டி,வீரகேளம்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் காங்கேயம், வள்ளலார், சத்துவாச்சாரி, காதிப்பட்டறை பகுதிகளால் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் 40 […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… 6 மாவட்டங்களில் அனல்காற்று தான் வீசும்: வானிலை மையம்!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி , தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் வடக்கு நோக்கி கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபடச்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியாசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சாவூர், நாமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என தகவல் அளித்துள்ளது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய கன […]

Categories
மாநில செய்திகள்

மணிக்கு 30-40 கி.மீ வரை சூறைக்காற்று வீசும் – மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 30-40 கி,மீ, வரை சூறைக்காற்று வீசும் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

வெப்பசலனத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]

Categories

Tech |