Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. வெள்ளத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கன்னியாகுமரியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் சாய்ந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்பின் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குழித்துறை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிருச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை, ஆலங்குளம், சூரியூர், பேராம்பூர், நீர்பழனி மற்றும் மலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலுக்கு மத்தியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்துள்ளது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு…. அமைச்சரின் நிதி உதவி…. குடும்பத்தினருக்கு கிடைத்த ஆறுதல்….!!

கன்னியாகுமரியில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர் 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை, ராமன்துறை போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நேரில் சென்று தலா 4 லட்சம் ரூபாய்க்கான நிதி தொகையை வழங்கியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரிக்கின்றது. இந்த வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… திடீரென பெய்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதியில் நேற்று மதியம் பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக கோடை வெயிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடும் வெயிலுக்கு மத்தியில்”… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் வெப்ப சலனத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பயங்கர சூறாவளி காற்றுடன் பெய்ததால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜில்லென்று வீசிய காற்று… குறைந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெப்பமெல்லாம் தனிஞ்சிருச்சு… சுமார் ஒரு மணி நேர மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்ப சலனத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில்  அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் அடை மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 5 மணிநேரம் பெய்த கனமழை…. சாக்கடையுடன் கலந்து ஓடியது….. வாகன ஓட்டிகள் அவதி….!!

கன்னியாகுமரியில் கனமழை கொட்டியதால் வண்டிகள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டில் வெள்ளம் காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை பெய்துள்ளது. இதேபோன்று  மேலும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு புறமும் மறுபுறம் கத்திரி வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுமார் ஒரு மணி நேரம்…. வெளுத்து வாங்கிய மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில்  குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனையடுத்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சற்று நேரம் ஜில்லென்ற காற்று… திடீரென பெய்த மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததால் மக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனையடுத்து சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்களுக்கு தான் குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கின்றது. இந்நிலையை அரியலூரிலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஏப்ரல் 26 வரை… மிதமான மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளிய தல காட்ட முடியல… இதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் நல்லா இருக்கு…ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி அடைந்த மக்கள்…!!

தென்காசியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம்  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாள் முதல் வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே போகவும், வரவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திர பட்டணத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையானது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. வெளுத்துப் போகும் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் கூறும் தகவல்..!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளா தேங்கி கிடந்துச்சு… இப்போ நாசமா போச்சு… விவசாயிகள் வேதனை..!!

மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 60 ஆயிரம் டன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்… கொட்டித் தீர்த்த கனமழை…. குளிர்ச்சியடைந்த பூமி…!!

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் இரவு நேரத்தில் வெப்ப சலனத்தால் மக்கள் துங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 150 டிகிரி வரை  பதிவான நிலையில் திடீரென இடி மீன்னலுடன்  கூடிய மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் சாக்கடை நீருடன் மழை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மரமெல்லாம் இப்படி சாயுமுன்னு நினைக்கல…. கொட்டித் தீர்த்த கனமழை…. வாகன ஓட்டிகள் பாதிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. தமிழகத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமத்தில் பல்வேறு வீடுகளிலுள்ள தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனையடுத்து பேருந்து நிலையம் மற்றும் சாலைகளில் மழை நீர் தெப்பம் போல் தேங்கி நின்றுள்ளது. மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… குளுமைப்படுத்த வந்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கையில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மழையினால் குளுமையான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 10 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இது தவிர அனல்காற்று பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனால் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் நேற்று முன்தினம் மிதமான வெயில் வழக்கம்போல் அடித்தது. இதையடுத்து திடீரென மதியம் 2 மணிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்கு குளுகுளு சீசன்லயும்… இப்படி ஒரு மழை… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இடி-மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது சில குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி இடி-மின்னலுடன் பலத்த மழை செய்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு மணி நேரம் பெய்த சாரல் மழை… குளிர்ந்த காற்று வீசியதால்… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பழனியில் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து சாரல் மழை பெய்தது. நேற்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… கொட்டி தீர்த்த கன மழை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

வேதாரண்யம் வாய்மேடு பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு, வேதாரண்யம் பகுதியில் கனமழை இரண்டாவது நாளாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு, தகடூர், மருதூர், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இப்பகுதியில் கடும் வெயில் கடந்த 15 நாட்களாக வெளுத்து வாங்கியது. இந்நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. மழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில்  வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் உழைப்பு முழுவதும் போச்சே…. மழையினால் ஏற்பட்ட பாதிப்பு…. கண்ணீர் விட்ட விவசாயி….!!

சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பிபாடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய தோட்டத்தில் சுமார் 2  1/2 ஏக்கர் பரப்பளவில் திசு வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் அறுவடைக்கு வாழைத்தார்கள்  தயாராக உள்ள நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைத்தார்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 10 மாவட்டங்களில்…. வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. மேலும் தற்போது 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இரண்டாவது நாளாக பெய்த மழை… குளிர்ந்த காற்று வீசியதால்… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் இரண்டாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வெப்பம் அதிகம் நிலவும் பகுதியாக உள்ளது. மேலும் அப்பகுதியில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடை வீதிகளுக்கு செல்லவும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் பலர் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலமாத்தூர், வேப்பூர், வயலப்பாடி, புதுவேட்டக்குடி, ஆகிய பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… அதிரடி அறிவிப்பு..!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 15, 16 தேதிகளில் சேலம், தர்மபுரி, தேனி. நீலகிரி, திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை… ஆர்ப்பரித்து கொட்டிய அருவி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் தொடர்ந்து பெய்த மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் ஆரம்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வருகை தருகின்றனர். அதற்கேற்றார்போல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சுமார் ஒரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“தென் மாவட்டங்களில் 4 நாட்கள் தொடர் மழை”… வானிலை மையம் அலெர்ட்….!!

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு தென் தமழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை […]

Categories
மாநில செய்திகள்

“29-ம் தேதி முதல் மீண்டும் மழை”… வானிலை மையம் அலெர்ட்..!!

29-ம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:- 25.01.2021 முதல் 27.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 29.01.2021: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போகாதீங்க… போகாதீங்கன்னு சொல்லியாச்சு….! யாருமே கேட்கல… தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய முதியவர் …!!

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

உள்மாவட்ட மக்களே…! 2நாட்களுக்கு எச்சரிக்கை… அலெர்ட் கொடுத்த வானிலை…!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகத்தின்  உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாள் கேப்…. மீண்டும் ஆரம்பித்த மழை…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கஷடப்படுறாங்க…! உடனே ரூ.40,000 கொடுங்க…! வைகோ பரபரப்பு அறிக்கை ..!!

மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடாமல் வெளுத்து வாங்கும் மழை…. போக்குவரத்துக்கு வழி இல்லை…. மக்கள் அவதி….!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருநெல்வேலி – திருச்செந்தூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராது விட்டு விட்டு இம்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக சூரியனையே பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் அணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த மழை…. விறுவிறுவென நிரம்பும் ஏரிகள் …!!

கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன.  பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடிய விடிய மழை… சேறும் சகதியுமான சாலை…. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையும் விடிய விடிய தூரல் பெய்தது. மழை தூறிக்கொண்டே இருப்பதன் காரணமாக முக்கிய சாலைகளில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழையால் நாசமான நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!!

திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு… மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று முதல்… 4 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை நிலவரம் குறித்து செய்திக் குறிப்பு  வெளியிட்டுள்ளது. அதில்,வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 28 ஆம் தேதியான இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனைப் போலவே நாளை (29) மற்றும் நாளை மறுநாள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களுக்கு… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… நான்கு மாவட்டங்களுக்கு… வெளியான எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 16 முதல் 18-ம் தேதி வரை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகிற16 முதல் 18-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளதாவது: – அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 (15.12.2020) மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு… மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் நகரவில்லை… மழை குறையவில்லை… தமிழகத்தில் ஏழு மாவட்டத்திற்கு எச்சரிக்கை..!!

புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மழை, வீட்டுக்குள் பாம்பு… அரசு புதுவித அறிவிப்பு…!!!

புயல் காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம். நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மழையால் வீடுகள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் வரக்கூடும் என்பதால், அவற்றை கண்டு அச்சமடைந்து அடித்துக் கொள்ளவும் வேண்டாம் என […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |