வங்கக்கடலில் தென்மேற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், இது நாகையிலிருந்து 333 கிலோமீட்டர் கிழக்கு தென் கிழக்கே காணப்படுகிறது. இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர் 26-ம் தேதி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களிலும், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், […]
