சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் […]
