நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல் ஒட்டி, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அறிவு சக்தி, காளீஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், […]
