காவல்துறையினர் தாக்கியதில் மளிகை வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மளிகை வியாபாரியான முருகேசன் என்பவர் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் முருகேசனிடம் விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே […]
