மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர் பகுதியில் அழகுமுத்து என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு அழகுமுத்து மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கருங்காலக்குடி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அழகுமுத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி […]
