மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வெங்கடாசலம். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வெங்கடாசலம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் இன்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த 53 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது […]
