வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருக்கும் மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ஒரு நபர் லுங்கியுடன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அவருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இது குறித்து அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லுங்கியுடன் சென்றதால் தனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அந்த […]
