மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் உதக மண்டலம் வரை போகும் மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றது ஆகும். ஊட்டி மலை ரயிலை போன்றே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனினும் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில், தனித்துவமிக்க ரேக் மற்றும் பினியன்அமைப்புடைய நாட்டில் முதல் மலைரயில் ஆகும் என தென்னக ரயில்வேயானது பெருமையுடன் டுவிட்டர் பதிவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை […]
