மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள். இதனால் பள்ளியில் இருந்து பாதியிலே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே மாணவர்கள் பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட குன்றி மலைப்பகுதியில் […]
