திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்காக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கார்த்திகை தீப நிறைவு நாளான நேற்று சிகர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரையை இந்த மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த […]
