பழங்குடியினர் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கைத் தரமோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோல். பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. வனச் சட்டங்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பிழைப்பு தேடி சமவெளிக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும்போது தங்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்று […]
