மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் உரையாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம்வயல், தச்சமலை, வட்டப்பாறை போன்ற கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தனிநபர் சட்டத்தின் கீழ் உரிமை பெறுவது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன்பின் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]
