களக்காடு மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பிரண்ட மலை உள்ளது. இந்த மலையில் உடும்பு, முயல், எறும்புத்தின்னி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரண்ட மலையில் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனைப் பார்த்த அந்த வழியில் சென்றவர்கள் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
