பிரபல மலையாள நடிகருக்கு ஸ்டண்ட் காட்சியின் போது அடிபட்டதால் படப்பிடிப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பஹத் பாசில். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார். இந்நிலையில் பஹத் தற்போது “மலையன்குஞ்சு” எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சியின் போது பஹத் பாசில் திடீரென கீழே விழுந்தார். அவருக்கு […]
