திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் […]
