வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]
