கரூரில் 5 வருடங்களாக காதலித்த இளம்ஜோடி திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலைக்கு அடுத்திருக்கும் தெலுங்குப்பட்டியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார். இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தன் உறவினர் பெண்ணான சிந்தியா என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகிறார். ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிந்தியாவின் பெற்றோர், உடனடியாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். […]
