கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் 240 கிலோ மீட்டர் சொகுசு காருக்குள் ராஜநாகம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனை சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த போது காருக்குள் பாம்பு ஏறியதை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை வெளியே எடுப்பதற்காக வனத்துறை […]
