கோவை மாவட்டம் ஆனை மலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்கள் இருக்கிறது. இவற்றில் உலாந்தி வனச்சரகத்தில் கோழிக முத்தியில் வனத்துறையின் பழமையான யானைகள் வளர்ப்பு முகாம் இருக்கிறது. இங்கு மொத்தம் 26யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதாவது யானைகளுக்கு பயிற்சியளித்து பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் 52 மாவூத் மற்றும் காவடிகள் இருக்கின்றனர். இம்முகாமில் உள்ள பெரும்பான்மையான யானைகளுக்கு மலசர் இனத்தை சேர்ந்த மாவூத் மற்றும் காவடிகள் பயிற்சியளித்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு […]
