தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.நீ.ம அறிக்கை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சென்ற திமுக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், […]
