சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி 179 வது பகுதிக்கான வாக்குப்பதிவு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி வீசியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு […]
