தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் படிப்புகளுக்கான 3,5,7வது செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால் அந்தத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. பாதி மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், […]
