திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]
