கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூர் கம்மங்காட்டு களம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருக்கிறார். இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் வீட்டில் 15 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்து […]
