முதியவர் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் சிவசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவசுப்பு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சிவசுப்புவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் வி.எம்.சத்திரத்தில் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு புதர் அருகே சிவசுப்பு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
