கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ரயில் நிலையத்தின் முன்புறம் ஒரு பெட்டி கிடந்தது. கடந்த மூன்று நாட்களாக கேட்பாரற்று பெட்டி கிடந்ததால் பொதுமக்களும், ஊழியர்களும் அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கலாம் என அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன கருவி மூலம் சோதனை செய்து பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லை. அதன் பிறகே அனைவரும் […]
