மர்ம நோயால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கால்நடைகளை ஏதோ ஒரு மர்மநோய் தாக்கி வருவதால் அவைகள் சரியாக தீவனம் சாப்பிடுவதில்லை. மேலும் ஆடுகள் சில நாட்களில் இறந்து விடுகின்றன. இந்நிலையில் வன்னிகுடி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். […]
