முகம் சிதைந்து பிணமாக கிடந்த வாலிபரை கொன்ற வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சேகம்பாளையத்தில் இருக்கும் ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
