தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளடி.மானகசேரி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நதிக்குடி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று பாலையா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் சக தொழிலாளர்கள் பாலையாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாலையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
