கால்நடைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வெட்டு பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்ற கந்தசாமிக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 கோழிகள் […]
