பிரான்சில் காவல்துறை அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பிரான்சில் உள்ள கெனிஸ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், காவல்துறையினர் சிலர் இன்று காலையில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி புறப்பட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினர் இருந்த வாகனத்தின் கதவை திறந்திருக்கிறார். அதன்பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் வாகனத்தின் முன் சீட்டில் இருந்த காவல்துறை அதிகாரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் அந்த அதிகாரிக்கு […]
