கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]
