வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மழையான் குடியிருப்பு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பார்கவியுடன் பரமக்குடியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தோசை வியாபாரம் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு […]
