சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பொண்ணாக்காணி சாலையில் மது குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் அருகில் சென்று பார்த்த போது வேலுச்சாமி இறந்து கிடந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். […]
