முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]
