மருத்துவமனையில் மாத்திரைகளை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அங்கிருக்கும் மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபாய் 68,000 மதிப்பிலான சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4, 2 00 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது […]
