உத்திரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்துக் கிடங்கு வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் இருக்கும் பூல்பாக் பகுதியில் ஓம் பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் அவருக்குச் சொந்தமான மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைத்திருந்தார். அந்த மருந்து கிடங்கில் அதிகாலை 4-மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்கட்டடம் வெடித்து சிதறியது. சம்பவத்தின்போது ராஜீவ் குமார் […]
