கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணையாக செலுத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்த்து பூஸ்டர் தவணை தடுப்பூசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒன்பது மாதங்கள் கழித்து தனியார் நிலையங்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு தவணைகள் எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களோ அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் தவணையாகவும் […]
