மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமதுபாயிக் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுபாயிக் […]
