Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு – ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு – டிடிவி தினகரன்…!!

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திரு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த […]

Categories
மாநில செய்திகள்

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்…!!

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் ஆரப் போடுவது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் திரு அபுபக்கர்  குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு…!!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!!

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவு எடுப்பதற்கு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்த… 5 அமைச்சர்கள்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… எந்த ஒரு குளறுபடியும் கிடையாது… அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்…!!!

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு குளறுபடியும் கிடையாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா சட்ட மன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தமிழக ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வெளியான “நீட்” தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் முடிவுகளை காணலாம்…!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக  நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்

Categories
மாநில செய்திகள்

ஓபிசி மாணவர்கள்… இந்த ஆண்டு நிச்சயம் கிடையாது… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு களில் இந்த வருடம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த வருடம் 50 சதவீத இட […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை ….!!

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டே 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இரண்டு நாட்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முடிவு […]

Categories
கல்வி மதுரை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முடிவு – உயர் நீதிமன்றத்தில் முறையீடு…!!

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்… அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு…!!

நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில்  7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டாம்… சென்னை உயர்நீதிமன்றம்…!!

மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது குறித்த வழக்கு விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்காக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஆக.31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிரப்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி இட ஒதிக்கீடு வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு….!!

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, தமிழக அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமற்றத்தை நாட அறிவுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது இது […]

Categories
மாநில செய்திகள்

முடிவு எடுத்த பாஜக சர்க்கார்…. ஒன்று சேர்ந்த தமிழகம்… செக் வைத்த ஐகோர்ட் …!!

அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓ.பி.சி இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு …..!!

மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக  அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம் : மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை விசாரணை!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மற்றும் பாமகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க கோரி தமிழக அரசு மனு!

மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் […]

Categories

Tech |