மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கம் கட்டிடத்தில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக மருந்து விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு வேலூர் மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, போதை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் யாருக்கும் வழங்கக் […]
