Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்… ஹைகோர்ட் உத்தரவிற்கு எதிராக மாணவியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய யானைக்குட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவக்குழு…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!

தாய்லாந்தில் மத யானை குட்டிகள் 3 குண்டடி காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள சோன்புரியில் 3 மத யானை குட்டிகள் எதிர்பாராதவிதமாக வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில் மாட்டிக்கொண்டது. மேலும் தோட்டாக்கள் யானையின் தோள்பட்டையில் பாய்ந்து எலும்பை துளைத்துள்ளது. இதனால் திசுக்கள் சேதமடைந்து அதிக அளவில் சீழ் வடிய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் தோட்டாவின் பெரும்பகுதியை அகற்றி எஞ்சியுள்ள தோட்டா துகள்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த தான் இந்த குழு… முன்னெச்சரிக்கையா இருங்க… சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதாரத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களில் சந்தை, கடைகள், மார்க்கெட் என அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

வீரியமிக்க புது கொரோனா பரவல்…. முன்னெச்சரிக்கை குறித்து…. முதல்வர் ஆலோசனை…!!

புதுவகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு  கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்வுக்கு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இதையடுத்து கடந்த மாதம் தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த தமிழக முதல்வர் பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா? 29ம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முதல்முறையாக 3000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 39,999 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 47,650 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜுன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது – அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை!

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்படும் நிலையில் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது – மருத்துவ குழு பேட்டி!

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது என மருத்துவ குழுவினர் தகவல் அளித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என கூறியுள்ளார். […]

Categories

Tech |