ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம்பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் ஊழியர், பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையில் அனுமதி கடிதத்தை காட்டியபோதும் போலீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் […]
