அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு மருத்துவப்படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ளும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னையைச் சோ்ந்த முனுசாமி என்ற 63 வயதுள்ள அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் நீட் தோ்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தாா். ஆனால் 6-12 ஆம் வகுப்பு […]
