பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை கமிட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கணபதிபுரம், சூரப்பள்ளம், கன்னக்குறிச்சி, ராஜாமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை கமிட்டி […]
