நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 43வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 126 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]
