தேனி மாவட்டத்தில் இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை அடக்கம் செய்யும் நேரத்தில் கையை அசைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரில் பிலவேந்திரராஜா(33) என்பவர் அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா 3வதாக கர்ப்பமாகி இருந்துள்ளார். இந்நிலையில் பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் […]
