கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . […]
